லைஃப்ஸ்டைல்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்

Published On 2020-08-08 10:28 GMT   |   Update On 2020-08-08 10:28 GMT
சர்க்கரை வள்ளிக்கிழங்கை விதவிதமாக சமைத்து பரிமாறலாம். இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 3
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி



செய்முறை :


ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை இட்லி தட்டில் அரை பாகம் வேகவைத்து தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

நறுக்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் துள், தனியா தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரட்டி வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை போட்டு மொறு மொறு என்று பொரித்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News