லைஃப்ஸ்டைல்
பிரெட் வடை

சூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் வடை

Published On 2020-07-14 10:30 GMT   |   Update On 2020-07-14 10:30 GMT
மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் பிரெட் வடை. இந்த வடையை செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பிரெட் துண்டுகள் - 6,
உளுத்தம் பருப்பு - 100 கிராம்,
வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.

பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சூப்பரான பிரெட் வடை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News