இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
- சிக்கன், மட்டன் சமைக்கும் போது சிறிதளவு தயிர் சேர்த்தால் சுவை கூடும்.
- மோர்க் குழம்பில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்தால் வாசனையாக இருக்கும்
* பாகற்காயை சிறு துண்டுகளாக வெட்டி, அரிசி கழுவிய தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்தால் அதன் கசப்புத் தன்மை நீங்கி விடும்.
* சப்பாத்தி மிருதுவாக இருக்க சப்பாத்தி மாவை தேய்த்தவுடன் தோசைக்கல்லில் போட்டு எடுத்து விட வேண்டும்.
* பொரியலுடன் வேர்க்கடலையை வறுத்துப் பொடியாக்கி இறுதியில் சேர்த்தால் அதன் சுவை கூடும்.
* ஊறுகாயில் மஞ்சள் தூள் சேர்த்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். ஊறுகாய் மணமாகவும் இருக்கும்.
* அல்வா செய்யும் போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் அதனுடன் சிறிது சோள மாவை சேர்த்தால் சரியான பதம் கிடைத்துவிடும். அல்வாவின் சுவையும் அதிகரித்து விடும்.
* மோர்க் குழம்பு செய்யும்போது இறுதியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்தால் குழம்பு வாசனையாக இருக்கும்.
* அரிசி வைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் வண்டுகள் புகாது.
* சர்க்கரைப் பாகு செய்யும் போது அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்தால் குலாப் ஜாமூன் விரியாமல் இருக்கும்.
* சிக்கன், மட்டன் சமைக்கும் போது அதில் சிறிதளவு தயிர் சேர்த்தால் சுவை கூடும்.