சமையல்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிவப்பரிசி புட்டு

Published On 2023-04-29 06:01 GMT   |   Update On 2023-04-29 06:01 GMT
  • சிவப்பரிசியில் புரதச்சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைந்தது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள் :

சிவப்பரிசி மாவு - 4 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். (முக்கியமாக தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட வேண்டாம். அதற்காக மிகுந்த வறட்சியுடனும் இருக்கக் கூடாது.)

புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும்.

பின்னர் புட்டு குழாயில், முதலில் சிறிது புட்டு மாவு போட்டு, பின்னர் துருவிய தேங்காயை போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு, குழாய் நிரம்பும் வரை இந்த முறையில் மாவை நிரப்பவும்.

பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.

பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறவும்.

சூப்பரான சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு ரெடி. சன்னாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News