சமையல்

நீரிழிவு, இதய நோயாளிகளுக்கு சத்தான ராஜ்மா ஸ்வீட்கார்ன் சாலட்

Published On 2023-06-16 05:53 GMT   |   Update On 2023-06-16 05:53 GMT
  • ராஜ்மாவில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவும்.
  • ராஜ்மாவில் உள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

தேவையான பொருட்கள்

ராஜ்மா - 1 கப்,

ஸ்வீட்கார்ன் - 1 கப்,

வெள்ளரிக்காய் - 1

தக்காளி - 1

வெங்காயம் - 1,

வெங்காயத்தாள் - சிறிதளவு,

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,

புதினா இலை - சிறிது.

செய்முறை :

வெங்காயம், தக்காளி, புதினா, வெள்ளரிக்காய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும்.

ஸ்வீட்கார்னையும் வேகவைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ராஜ்மா, ஸ்வீட்கார்ன், உப்பு, வெங்காயம், தக்காளி, வெங்காயத்தாள், வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், புதினா சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

அருமையான ராஜ்மா, ஸ்வீட்கார்ன் சாலட் ரெடி.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News