சமையல்

சூடான இட்லிக்கு சூப்பரான புதினா தக்காளி சட்னி

Published On 2023-03-12 09:55 GMT   |   Update On 2023-03-12 09:55 GMT
  • இந்த சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
  • இந்த சட்னி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

தேவையான பொருட்கள்:

தக்காளி - 3,

பெரிய வெங்காயம் - 2,

புதினா - அரை கைப்பிடி,

வர மிளகாய் - 5,

புளி - ஒரு சிறு நெல்லி அளவு,

இஞ்சி - ஒரு சிறு துண்டு,

கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,

சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க

கடுகு, கறிவேப்பிலை

செய்முறை :

தக்காளி, வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

புதினா இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சியை தோல் உரித்து கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும் அதில் புளி மற்றும் இஞ்சி சேர்த்து வறுக்கவும்.

அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி சேர்த்த பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும்.

அடுத்து புதினா இலைகளைச் சேர்த்து சுருள வதங்கியதும், அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

இந்த பொருட்களெல்லாம் நன்கு ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு நைஸாக அரைக்க வேண்டும்.

ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டுதாளித்து சட்னியில் கொட்டி இறக்கினால் தக்காளி புதினா சட்னி தயார்.

இதனுடன் சூடான இட்லி, தோசை வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

Tags:    

Similar News