சமையல்
null

குழந்தைகளுக்கு விருப்பமான சிமிலி உருண்டை

Published On 2023-08-16 09:14 GMT   |   Update On 2023-08-17 06:55 GMT
  • சத்தாண சிமிலி உருண்டை பெண் குழந்தைகளுக்கு ஏற்றது.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

தேவையான பொருட்கள்:-

கேழ்வரகு (ராகி) மாவு - 250 கிராம்

வெல்லம் -300 கிராம்

வேர்கடலை - 200 கிராம்

ஏலக்காய்- 4 நம்பர்

நெய் - தேவையான அளவு

உப்பு- ஒரு சிட்டிகை

செய்முறை:-

ஒரு கடாயில் 200 கிராம் வேர்கடலையை சேர்த்து நன்றாக மனம் வரும் வரை வறுத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் 250 கிராம் கேழ்வரகு (ராகி) மாவு, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறி சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு தோசை தவாவில் எண்ணை அல்லது நெய் சேர்த்து ரொட்டி அளவிற்கு திரட்டி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

வேக வைத்து ராகி ரொட்டி துண்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே மிக்சி ஜாரில் 300 கிராம் வெல்லத்தை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாய் அகன்ற பாத்திரத்தில் பொடித்த வெல்லம், பொடித்த வேர்கடலை, வேகவைத்து பொடித்த ராகி ரொட்டிகளையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.

இந்த கலவையுடன் ஏலக்காய் பொடி, 3 கரண்டி நெய் சேர்த்து அனைத்தையும் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடித்து எடுத்து வைக்கவும். சுவையான சிமிலி உருண்டை தயார்.

90-களில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த சிமிலி உருண்டைகளை ஸ்நாக்காக செய்து கொடுப்பார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஊட்டச்சத்து நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.

Tags:    

Similar News