சமையல்

பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ செய்யலாம் வாங்க...

Published On 2023-05-18 14:53 IST   |   Update On 2023-05-18 14:53:00 IST
  • குழந்தைகள் வேக வைத்த முட்டையை சாப்பி மாட்டார்கள்.
  • முட்டையை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

முட்டை - 3

வெங்காயம் - 1

பூண்டு - 5 பல்

காய்ந்த சிவப்பு மிளகாய் - 10

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு கரைத்த தண்ணீர்- தேவையான அளவு

எலுமிச்சை தண்ணீர்- தேவையான அளவு(எலுமிச்சை சாறில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்தது)

புளி தண்ணீர்- தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

* முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விடவும்.

* பூண்டு, வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வெங்காயம் ஆறியதும் மொறு மொறு என்று இருக்கும்.

* அடுத்து பூண்டை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு பொரிந்ததும் எடுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பொரித்த பூண்டை நன்றாக கைகளால் பொடித்து போடவும். அடுத்து அதில் வெங்காயம், காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.

* வேகவைத்த முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் பொரித்த வெங்காயம் பூண்டு கலவையை வைக்கவும்.

* இதன்மேல் சிறிதளவு எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் போடவும். இவை அனைத்தையும் சில துளிகள் மட்டும் போடவும்.

* இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

* சூப்பரான பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ ரெடி.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News