சமையல்

சிக்கன் ஹக்கா நூடுல்ஸ்

Published On 2023-10-09 15:23 IST   |   Update On 2023-10-09 15:23:00 IST
  • நூடுல்ஸ் ஒரு கவர்ச்சியான, சுவையான நறுமணம் மற்றும் சுவையான உணவாகும்.
  • சீன நூடுல்சை அடிப்படையாகக் கொண்டது.

சிக்கன் ஹக்கா நூடுல்ஸ் ஒரு கவர்ச்சியான, சுவையான நறுமணம் மற்றும் சுவையான உணவாகும். இது சீன நூடுல்சை அடிப்படையாகக் கொண்டது. அதில் காய்கறிகளுடன் மிருதுவாக கிளறி வறுத்தெடுக்கப்படுகிறது. இதில் மென்மையான சிக்கன் துண்டுகளுடன் பரிமாறப்படுகிறது. ஒரு வண்ணமயமான உணவாகும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் விரும்பும் வகையில் இருக்கும் இந்த சிக்கன் ஹக்கா நூடுல்ஸ். ஒரு ஆரோக்கியமான மற்றும் திருப்தியான உணவாகும்.

தேவையான பொருட்கள்:

கோழி- 1 கப் (வேகவைத்து சிறிய துண்டுகளாக்க வேண்டும்

நூடுல்ஸ்- 150 கிராம்

தண்ணீர்-4 கப்

முட்டைக்கோஸ் -1/4 கப் (மெல்லியதாக நீளமாக நறுக்கியது)

சின்ன வெங்காயம்- 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ்- 1/4 கப் (நறுக்கியது)

கேரட் - 1/4 கப் மெல்லிய (மெல்லியதாக நீளமாக நறுக்கியது)

வெங்காயம்- 1 (நீளவாக்கில் நறுக்கியது)

காய்ந்த மிளாகாய்- 1/2 டீஸ்பூன் (சில்லி ஃபிளேக்ஸ்)

பூண்டு- ஒரு ஸ்பூன்

வினிகர்- ஒரு ஸ்பூன்

சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் சாஸ்- ஒரு ஸ்பூன்

மிளகு தூள்-ஒரு ஸ்பூன்

எண்ணெய்- 2 டீஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நூடுல்ஸ் சேர்க்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்க்க வேண்டும். 5 நிமிடத்திற்கு பிறகு நூடுல்சை ஒரு வடிகட்டிக்கு மாற்ற வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

கடாயில் சில்லி ஃபிளேக்ஸ், முட்டைக்கோஸ், பீன்ஸ் மற்றும் கேரட் போன்ற கய்கறிகளை சேர்த்து அதிக தீயில் 30 விநாடிகள் வதக்க வேண்டும். அதன்பிறகு வேகவைத்து சிறிதாக வெட்டி வைத்துள்ள கோழி இறைச்சியையும் அதில் சேர்த்து ஒரு நிமிடம் கிளற வேண்ம்.

அதன்பிறகு வெங்காயம், சோயா சாஸ், பச்சை மிளகாய் சாஸ் மற்றும் வினிகர் ஆகியவற்றை வாணலியில் அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின்னர் அதில் வேகவைத்த நூடுல்ஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இறக்குவதற்குமுன் வெங்காயத்தாள் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

Tags:    

Similar News