சமையல்
பாலக்கீரை சூப்

புரதத்சத்து நிறைந்த பாலக்கீரை சூப்

Update: 2022-04-23 05:22 GMT
கர்ப்பிணிகளுக்கு தேவையான அத்தியாவசிய சத்தான போலிக் ஆசிட் இந்த கீரையில் அதிகம் உள்ளது. பாலக்கீரை ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள் :

பாலக்கீரை - ஒரு கட்டு,
மிளகு, சீரகம் - தேவைக்கு,
பாசிப் பருப்பு வேக வைத்த தண்ணீர் - ஒரு கப்,
வெங்காயம் , தக்காளி - தலா ஒன்று,
பூண்டு - 5 பல்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை:

தக்காளி, வெங்காயம், கீரை, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், தக்காளி , தண்ணீர் சேர்த்து வேக விட்டு இறக்கவும்.

ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.

அதனுடன் பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பருகலாம்..
Tags:    

Similar News