சமையல்
கடலைப்பருப்பு தனியா துவையல்

கடலைப்பருப்பு தனியா துவையல்

Update: 2022-04-13 05:31 GMT
இட்லி, தோசை, சாதத்துடன்.. சேர்த்து சாப்பிட இந்த கடலைப்பருப்பு தனியா துவையல் அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
மல்லி (தனியா) - 3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -  6
சின்ன வெங்காயம் - 10 (தோலுரிக்கவும்)
பூண்டுப் பல் -  6
தக்காளி - 2
புளி - தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை (காம்புடன்) - 2 கைப்பிடி அளவு
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

தனியாவை வெறும் வாணலியில் போட்டு வறுத்து கொள்ளவும்.

மற்ற பொருள்களை எண்ணெய்விட்டு வதக்கி ஆற வைக்கவும்.

மிக்சியில் முதலில் வறுத்த தனியாவை போட்டு பொடித்து கொள்ளவும்.

பின்னர் அதனுடன் வதக்கிய மற்ற பொருட்களை போட்டு அதனுடன் உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

சூப்பரான கடலைப்பருப்பு தனியா துவையல் ரெடி.

இந்தத் துவையல் இட்லி தோசைக்கு மட்டுமன்றி தயிர் சாதத்துக்கும் நன்றாக இருக்கும்.
Tags:    

Similar News