சமையல்
சௌ சௌ கூட்டு

கால்சியம் சத்து நிறைந்த சௌ சௌ கூட்டு

Published On 2022-04-05 05:15 GMT   |   Update On 2022-04-05 05:15 GMT
வயிற்றில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து வெளியேற்ற, சௌ சௌ உதவி செய்யும். சௌ சௌவில் உள்ள கால்சியம் சத்து, குழந்தைகளின் உடல் வளர்ச்சிகளை ஊக்கப்படுத்தி, அவர்கள் எலும்பு வளர்ச்சியை வலுவாக்கும்.
தேவையான பொருட்கள்:

சௌ சொள - 2
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

சௌ சௌவை தோல் நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

துவரம் பருப்பு வேகவைத்து மசித்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் சௌ சௌ, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் மசித்த பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சௌ சௌ கூட்டு ரெடி!!!
Tags:    

Similar News