சமையல்
ராமசேரி இட்லிப்பொடி

கேரளா ஸ்பெஷல் ராமசேரி இட்லிப்பொடி

Update: 2022-03-31 05:24 GMT
கேரள மாநிலத்தில் ராமசேரி இட்லி மிகவும் பிரபலமானது. இத்துடன் சாப்பிடுவதற்கு கொடுக்கப்படும் இட்லிப்பொடி பிரத்யேக சுவை கொண்டது. அதன் செய்முறை இதே..
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கல் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சிறு தீயில் பச்சரிசியை சிவக்க வறுக்கவும். அதை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.

அரிசி வறுத்த அதே கடாயில் உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுத்து ஆற வைக்கவும்.

மீண்டும் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் மிளகு, சீரகம் போன்றவற்றை போட்டு வறுக்கவும்.

அதில் பெருங்காயத்தை போட்டு சில நொடிகள் வறுத்தெடுக்கவும்.

வறுத்த பொருட்களை ஆறவைத்து கல் உப்பு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக பொடியாக அரைத்து கொள்ளவும்.

இட்லி அல்லது தோசையுடன் இந்த பொடியை தேங்காய் எண்ணெய் கலந்து சாப்பிடலாம்.
Tags:    

Similar News