சமையல்
வேப்பம்பூ வடகம்

இன்று ஆரோக்கியம் நிறைந்த வேப்பம்பூ வடகம் செய்யலாம் வாங்க...

Update: 2022-03-28 05:18 GMT
தினமும் சிறிது வேப்பம்பூவை சமைத்து சாப்பிட்டு வர வயிறு உப்பிசம், பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீரல் பாதுகாக்கப்படும்.
தேவையான பொருட்கள்

காய வைத்த வேப்பம்பூ - 3 கப்
உளுந்து - 1 கப்
மிளகு - 1 தேக்கரண்டி
பெரிய சீரகம் - 1 மேசைக்கரண்டி
சிறிய சீரகம் - 1 மேசைக்கரண்டி
வெட்டிய வெங்காயம் - 1/2 கப்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
மிளகாய் பிளேக்ஸ் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

மிளகு, பெரிய, சிறிய சீரகங்களை பொடித்து கொள்ளவும்.

உளுந்தை நன்றாக கழுவி 5 மணிநேரம் ஊற வைத்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் காய்ந்த வேப்பம் பூ மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கலக்கவும்.

பின்னர் அதனை நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி சுத்தமான காய்ந்த ஒரு துணியில் அடுக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.

வேப்பம்பூ வடகம் தயார்.

இதனை ஒரு சுத்தமான் காய்ந்த கண்ணாடி டப்பாவினுள் போட்டு தேவையான போது எடுத்து எண்ணெயில் பொரித்து சாதம், புட்டு போன்றவற்றுடன் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு

இதற்கு வெங்காயத்தை நல்ல நீளவாக்கில் வெட்ட வேண்டும். ஒரு வருடத்துக்கு மேல் வைத்து உடயோகிக்கலாம். கெட்டு போகாது.
Tags:    

Similar News