சமையல்
அரிசி பச்சை பயறு கஞ்சி

டயட்டில் இருப்பர்களுக்கு உகந்த அரிசி பச்சை பயறு கஞ்சி

Published On 2021-12-16 05:19 GMT   |   Update On 2021-12-16 05:19 GMT
டயட்டில் இருப்பர்கள் காலையில் எப்போதும் ஓட்ஸ் சாப்பிட்டு போர் அடித்திருக்கும். இவர்கள் வாரம் ஒருமுறை பயறு கஞ்சியை எடுத்து வரலாம். இந்த பயறு கஞ்சியானது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
பச்சை பயறு - 3/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 1 பல்
சின்ன வெங்காயம் - 5
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 8 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுக்க வேண்டும்.

பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

நீரானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் பச்சை பயறு சேர்த்து மூடி வைத்து, அரிசி மற்றும் பயறு வேகும் வரை அடுப்பில் வைத்து, வேண்டுமானால் இன்னும் சிறிது நீர் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

அரிசி மற்றும் பயறு நன்கு வெந்ததும், அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி பரிமாறினால், பச்சை பயறு கஞ்சி ரெடி!!!

Tags:    

Similar News