லைஃப்ஸ்டைல்
ஓட்ஸ் கேரட் பான்கேக்

சத்தான டிபன் ஓட்ஸ் கேரட் பான்கேக்

Published On 2020-02-14 04:35 GMT   |   Update On 2020-02-14 04:35 GMT
குழந்தைகளுக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ஓட்ஸ், கேரட் சேர்த்து பான் கேக் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

ஓட்ஸ் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கேரட் -2
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர், நெய், உப்பு - தேவையான அளவு



செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், கடலை மாவு, கேரட் துருவல், வெங்காயம், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். 10 நிமிடம் அப்படியே மாவை ஊற விடவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சின்ன சின்ன பான்கேக்காக ஊற்றி, நெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

சத்தான சுவையான ஓட்ஸ் பான்கேக் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News