பெண்கள் உலகம்

பால் உணவும் - விளைவுகளும்

Published On 2019-03-01 14:03 IST   |   Update On 2019-03-01 14:03:00 IST
பால் மனித உணவுதானா? என்பதில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன, ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. சாதாரண பாமரனாகிய நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன்.
பால் மனித உணவுதானா? என்பதில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன, ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. சாதாரண பாமரனாகிய நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன்.

100 மில்லி பாலில் 125 மி.கிராம் சுண்ணாம்பு சத்து (கால்சியம்) உள்ளது. இது எலும்பு மற்றும் பல்லுக்கு தேவைப்படுவதாக நம்மில் பலர் நினைக்கிறோம். பாலில் நிறைய கால்சியம் இருந்தாலும் பாலின் அமிலத்தன்மை ரத்ததில் சேரும்போது, ரத்தத்தின் அமில காரத்தன்மையை சரியான அளவில் வைப்பதற்காக, எலும்புகளில் இருக்கும் கால்சியத்தை அதிக அளவில் செலவழிக்கிறது, இதனால் எலும்பின் உறுதி குறைகிறதாக கூறப்படுகிறது.

மேலும் பாலில் இரும்பு சத்து இல்லை. பாலில் உள்ள கெசின் என்ற புரதம் நமது உடலில் இரும்புசத்து சேர்வதை தடுக்கிறது. சுவீடன் நாட்டில், 39 வயதிற்கு மேற்பட்ட 61 ஆயிரம் பெண்களும், 45 ஆயிரம் ஆண்களும் பங்கேற்ற ஒரு ஆய்வு, பால் அருந்துபவர்களின் நலன் குறித்த கேள்விகளைக்கொண்டு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் பின்வரும் சில மோசமான விளைவுகளை ஆய்வாளர்கள் கண்டுள்ளனர்.

பால் அருந்துவதற்கும், உடல் நலக்குறைவு ஏற்படுவது மற்றும் இறப்பு விகிதம் அதிகப்படுவது இரண்டிற்கும் தொடர்பு இருந்துள்ளது. பால் அருந்துவது எலும்பு முறிவதிலிருந்து பாதுகாப்பதில்லை. அதிகமாக பால் அருந்தும் பெண்களுக்கு, எலும்புமுறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருந்துள்ளது. லேக்டோஸ், காலக்டோஸ் எனும் சர்க்கரை பாலில் அதிக அளவில் இருப்பதால் உடல் நலக்குறைவும் ஏற்பட வாய்புள்ளதாம்.

அடுத்தது! இந்தியா முழுவதும் சேகரிக்கப்பட்ட பால் மாதிரிகளில் 70 சதவிகிதம் பால் தரமானதாக இல்லையாம். இந்தியாவில் பெரும்பாலானோர் பருகும் பாலுடன் சலவைபொருள் (சோப்பு) போன்ற கலப்படம் உள்ளதாக 2011&ம் ஆண்டில் பால் கலப்படம் பற்றிய தேசிய ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மேலும் யூரியா, ஸ்டார்ச், குளுகோஸ், ஃபார்மலின், போன்றவையும் பாலின் அடர்த்தியை அதிகமாக்கவும், நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்கவும் கலப்படமாக

பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாம். வெண்னை எடுக்கப்பட்ட பாலின் 548 மாதிரிகளில் 477 மாதிரிகளில் குளுகோஸ் கலப்படம் இருந்ததாம்.
கறந்த பால் அதன் தன்மை மாற்றப்படாமல்தான் நமக்கு கிடைக்கிறதா? பல்வேறு விதமான ரசாயனங்கள் கலப்பிற்கு பிறகுதான் நமக்கு கிடைக்கிறதா..? உண்மையில் நாம் குடிக்கும் பால் இயற்கையானதா? செயற்கையானதா?



நம் உடலில் உள்ள மரபணுக்களோடு சேரும் தன்மை உள்ள பால்களைத்தான் நமது முன்னோர்கள் குடித்துள்ளார்கள். அந்த பால்களை குடித்தவர்களும் அந்த மாடுகளைப் போல் கடுமையாக உழைத்துள்ளார்கள். அந்த மாடுகளையும் தங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய உறுப்பினராகவே கருதி அவற்றுக்கு பூஜைகளையும் செய்து வணங்கி வந்துள்ளார்கள் என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும்.

அன்பர்களே! நமது தாய் நமக்காக பார்த்து பார்த்து நல்ல உள்ளத்துடன் சமைக்கும் உணவுக்கும், வியாபாரத்திற்காக சமைக்கும் உணவுக்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளதோ, அதைப் போல்தான்! தாயாக நினைத்து வளர்த்த நாட்டு பசுக்களின் பாலை, நான் மற்றும் நீங்களும் குறைகூற இயலாது. அற்புதமான இந்த நாட்டு பசுக்களின் பாலைக் குடிப்பவர்களும், இந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு நமது முன்னோர்களைப்போல் உழைக்கிறார்கள்? உடல் உழைப்பே இல்லாதவர்கள் பால் குடிப்பது அவர்களுக்கு நல்லதுதானா? மனிதனை தவிர மற்ற ஏதேனும் ஜீவன்கள் பிறப்புமுதல் இறப்பு வரை தொடர்ந்து பால் குடிக்கின்றனவா?

ஏ ஒன் பால், ஏ டூ பால்

சீமை பசு மாடுகள் எனும் கலப்பின சிந்து, ஜெர்சி போன்ற அதிக பால் கறக்கும், மரபணு மாற்றப்பட்ட மாடுகளின் பால்களை ஏஒன் பால் என்றும், நமது நாட்டு இனப் பசுக்களின் பாலை ஏடூ பால் என்றும் ஏன் கூறுகிறார்கள்?

இரண்டு தன்மைகளும் வேறு வேறாக உள்ளனவா? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? எது நல்லது? எது பாதிப்பானது? நாம்தான் சிந்திக்க வேண்டும்!. வியாபாரிகளையும், நோயாளிகளை அதிகம் எதிர் பார்ப்பவர்களையும் நம்பலாமா?

சமீபத்தில் குழந்தை நல மருத்துவர் ஒருவர், தன் குழந்தை மிகவும் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், தன் குழந்தையை அருகில் இருந்து பார்க்கவேண்டி உள்ளதால், தன் மருத்துவப்பணி செய்யாமல் வீட்டில் உள்ளேன் என்றார். நான் அவரிடம், தயவுசெய்து மூன்று நான்கு நாட்களுக்கு மட்டுமாவது நீங்கள் தரும் மாட்டுப்பாலை நிறுத்திப் பாருங்கள், என்றேன். ஒரு வாரம் கழித்துவந்து, அவர், நீங்கள் கூறியதுபோல் பாலை நிறுத்தினேன் என் குழந்தை தற்போது நன்றாக உள்ளார், நானும் என் பணிக்குச் செல்கிறேன் என்றார். சிறு குழந்தைகள்முதல், ஆஸ்துமா, சளித் தொல்லைகள் போன்ற நுரையீரல் கோளாறுகள் உள்ளவர்கள்வரை, மாட்டுப் பால் குடிப்பதை நிறுத்தினால் உடனடியாக உண்மையை உணர்வீர்கள்!

Similar News