உடற்பயிற்சி

யோகாசனத்தின் மகிமை

Published On 2022-06-22 03:01 GMT   |   Update On 2022-06-22 03:01 GMT
  • யார் ஒருவர் யோகாசனம் செய்கின்றாரோ அவர்கள் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.
  • யோகாசங்களை முறையாக தினமும் பயின்றால் பரம்பரை வியாதிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

யார் ஒருவர் யோகாசனம் செய்கின்றாரோ அவர்களுக்கு உடலில் தமோ குணம் அதிர்வலைகள் இருந்தால் படிப்படியாக குறைந்து ரஜோகுண பண்புகள் நல்ல பண்புகள் வளரும். தொடர்ந்து பயிற்சி செய்தால் சத்வகுண அதிர்வலைகளாக மாறி மனிதன், மாமனிதனாக உயரலாம். எனவே இன்றைய காலத்தில் யாரும் அறிவுரைகளை ஏற்க விரும்புவதில்லை, அப்படிப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக யோகாசனங்களை செய்தால் போதும், அவர்களிடமுள்ள தீய பண்புகள் மாறி சிறந்த மனிதனாக நற்பண்புடைய மனிதனாக மாற்றுவது யோகாசனமாகும்.

நமது உடலில் கழிவுகள் நான்கு விதமாக வெளியேற வேண்டும். சிறுநீராக, மலமாக, வியர்வையாக, கார்பன் டை ஆக்சைடாக. இந்த கழிவுகள் சரியாக வெளியேறினால் நமக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். யார் ஒருவர் யோகாசனம் செய்கின்றாரோ அவர்கள் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். ஆரோக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

யோகாசனங்களை முறையாக கற்க குருவின் மேற்பார்வையில் பயிலுங்கள் நல்ல பலன்கள் கிடைக்கும். யோகாசனம் செய்தால் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் கோனாடு சுரப்பி, அட்ரீனல் சுரப்பி, பாங்க்ரியாஸ் சுரப்பி, தைமஸ் சுரப்பி, தைராய்டு சுரப்பி, பாரா தைராய்டு சுரப்பி, பினியல் சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பிகள் சரியான விகிதத்தில் சுரக்கும், அதனால் முழுமையான ஆரோக்கியத்துடன் வாழலாம்.

நீரழிவு, ரத்த அழுத்தம், மூட்டுவலி, முதுகு வலி, கழுத்து வலி, மூலம், அல்சர் போன்ற நோய் வராமல் வாழ யோகாசனம் பயின்றால் மேற்குறிப்பிட்ட நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். நீரழிவு, ரத்த அழுத்தம் எல்லாம் பரம்பரை வியாதி என்று சொல்கிறோம். யோகாசங்களை முறையாக தினமும் பயின்றால் பரம்பரை வியாதிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

Tags:    

Similar News