உடற்பயிற்சி

முதுகெலும்புக்கு வலிமை தரும் ஊர்துவதனுராசனம்

Published On 2022-06-18 02:49 GMT   |   Update On 2022-06-18 02:49 GMT
  • இந்த யோகா பயிற்சியை அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
  • தினமும் செய்து வந்தால் முதுகெலும்பு வலுப்பெறும்.

செய்முறை: தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். கால்களை மடக்கி உடலுக்கு நெருக்கமாகக் கொண்டுவர வேண்டும். கால்களுக்கு இடையே சற்று

இடைவெளி இருக்கட்டும். கைகளை, தலைப் பக்கம் கொண்டுவந்து உள்ளங்கை, விரல் உடலைப் பார்த்தபடி தரையில் பதிக்கவும். இப்போது மூச்சை நன்கு

இழுத்துக் கை, கால்களைத் தரையில் அழுத்து உடலை உயர்த்த வேண்டும். முடிந்தவரை வயிறு பகுதி மேலே வரும் அளவுக்கு உடலை வில் போல வளைக்க

வேண்டும். இப்போது உடலின் முழு எடையும் கை - கால்களில் இருக்கும். இந்த நிலையில் ஓரிரு நிமிடங்கள் இருந்துவிட்டு மூச்சை வெளியே விட்டபடி

பழைய நிலைக்கு வர வேண்டும்.

குறிப்பு: ஒரு நாளைக்கு இதை ஆறு முறை வரை செய்யலாம். இந்த யோகா பயிற்சியை அனைவரும் முயற்சிக்க வேண்டாம். நீண்ட நாட்கள் யோகா பயிற்சி

பெற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டும்.

பலன்கள்: தினமும் செய்து வந்தால் முதுகெலும்பு வலுப்பெறும். கூன் விழுவது தவிர்க்கப்படும். உடல் புத்துணர்வு பெறும். கை, கால்கள் பலம் பெறும்.

நுரையீரல் செயல்திறன் அதிகரிக்கும்.

Tags:    

Similar News