உடற்பயிற்சி

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம்

Published On 2023-01-17 10:03 IST   |   Update On 2023-01-17 10:03:00 IST
  • மனம் ஒரு நிலை அடைந்து தியான சக்தி தூண்டப்படுகிறது.
  • ஜீரண சக்தி அதிகமாகிறது.

செய்முறை :

விரிப்பில் நேராக நிற்க வேண்டும். பார்வையை ஒரு இடத்தில் பதித்து, இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும்.

பின்னர் வலது காலை இடுப்பு வரை தூக்கி வலது பக்கமாக திருப்ப வேண்டும். கால் முட்டியை மடக்கக்கூடாது. வலது கையால் இடது கால் கட்டை விரலை பிடித்து கொள்ள வேண்டும்.(படத்தில் உள்ளபடி)

இப்போது இடது கையை பக்கவாட்டில் நீட்டி சின் முத்திரை வைத்து தலையை இடது பக்கமாக திருப்பி சின் முத்திரையை பார்க்க வேண்டும். நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். முதுகை வளைக்கக்கூடாது. இந்த நிலையில் ஒவ்வொரு முறையும், 20 முதல் 30 வினாடிகள் நின்ற பிறகு பழைய நிலைக்கு வரவும். பின்னர் கால்களை மாற்றி வலது பக்கம் இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம்.

இடுப்பு அல்லது மூட்டுகளில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். ஒற்றைக் காலில் நிற்பது கடினமாக இருந்தால் சுவரோடு லேசாக ஒட்டியபடி நின்று இவ்வாசனத்தைப் பழகவும்.

பயன்கள் :

மூட்டுப்பகுதி நன்கு வலுவடைகிறது. கால்களை நீட்சியடையச் செய்வதுடன் கால் தசைகளைப் பலப்படுத்தவும் செய்கிறது.

மனம் ஒரு நிலை அடைந்து தியான சக்தி தூண்டப்படுகிறது. ஜீரண சக்தி அதிகமாகிறது. ஜணன உறுப்புகள் நன்கு தூண்டப்பட்டு சரியாக இயங்குகிறது.

நரம்பு சுருள் பிரச்னை சரியாகிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.

Tags:    

Similar News