உடற்பயிற்சி

தினமும் யோகா செய்தால் மாணவர்கள், பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

Update: 2022-06-24 02:39 GMT
  • யோகாசங்களை முறையாக தினமும் பயின்றால் பரம்பரை வியாதிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
  • யோகாசனங்களை முறையாக கற்க குருவின் மேற்பார்வையில் பயிலுங்கள்.

மாணவர்களுக்கு நன்மைகள்

படிக்கும் பள்ளி மாணவர்கள் அவசியம் தினமும் யோகாசனம் செய்ய வேண்டும். செய்தால்

• ஞாபக சக்தி அதிகரிக்கும்

• மன அழுத்தம் நீங்கும்

• கோபம் குறையும்

• பொறுமை, நிதானம் பிறக்கும்

• தன்னம்பிக்கை அதிகமாகும்

• எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்

• நேர்முகமான எண்ணங்கள் வளரும்

• பெரியவர்கள் மதிப்பார்கள்

• பிற்கால வாழ்க்கை ஆரோக்கியமாக அமையும்

• சமுதாயத்தில் சிறந்த பண்புள்ள

தலைவனாக உருவாகுவார்கள்

மாணவர்கள், பத்மாசனம், வஜ்ராசனம், புஜங்காசனம், பச்சி மோஸ்தாசனம், சர்வாங்காசனம், மச்சாசனம், போன்ற ஆசனங்களை முறையாக தக்க ஆசானிடம் பயின்று பலன் அடையுங்கள்.

பெண்களுக்கு நன்மைகள்

பெண்களுக்கு யோகாசனத்தால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன

• மாதவிடாய் பிரச்சினை தீரும்

• மாதவிடாய் சரியாக வரும். அதிக உதிரப்போக்கு வெள்ளைப்படுதல் சரியாகும். மன அழுத்தம் நீங்கும்

• இடுப்பு வலி, எலும்பு தேய்மானம் வராது

• உடல் பருமன் குறையும்

• தைராய்டு பிரச்சினை சரியாகும்

• கருப்பை நன்கு இயங்கும்

• சுகப்பிரசவம் உண்டாகும்

• இளமையுடன் வாழலாம்

குடும்பத்தில் நன்மைகள்

குடும்பத்தில் தாய், தந்தை, மகன், மகள், தாத்தா, பாட்டி இருக்கலாம். இன்று பெரும்பாலான குடும்பத்தில் அனைவரும் மருத்துவரிடம் சென்று தொடர்ந்து BP மாத்திரை, சுகர் மாத்திரை என்று மாதம் வருமானத்தில் பெரும்பங்கு மருத்துவத்திற்கு செலவழிக்கின்றனர். முறையாக அவர்களுக்கு உகந்த எளிமையான யோகாசனங்கள் செய்தால் நிச்சயமாக மாத்திரை சாப்பிடாமல் வாழலாம். மருத்துவ செலவு மிச்சமாகும். மன அழுத்தம் இல்லாமல் வாழலாம்.

ஒரு குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படும். மன அமைதி குறையும். பணம் ஒரு பக்கம் செலவாகும், மறுபக்கம் மன அழுத்தம் அதிகமாகும். எனவே குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் எளிமையான யோகாசனங்களை தினமும் பயிற்சி செய்து நோயின்றி ஆனந்தமாக வாழுங்கள்.

உங்களது, உடல் நிலை, வயது, உடலில் உள்ள வியாதியின் தன்மைக்கேற்ப தக்க குருவிடம் யோகக்கலைகளை பயின்று வளமாக வாழுங்கள்.

Tags:    

Similar News