உடற்பயிற்சி

குழந்தை பாக்கியம் தரும் குதபாத ஆசனம்

Update: 2022-06-17 03:49 GMT
  • குழந்தை பாக்கியம் யோகக்கலை மூலம் நிச்சயம் கிட்டும்.
  • மன அழுத்தத்துடன் தம்பதியர் சேரும்பொழுது குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை.

குழந்தை பாக்கியம் யோகக்கலை மூலம் நிச்சயம் கிட்டும். யோகக்கலை என்பது உடல் சார்ந்த பயிற்சி மட்டுமல்ல. உடல், மனம், சார்ந்த பயிற்சி. பண்பாட்டை, பழக்கவழக்கத்தை சரி செய்யும் பயிற்சி. இன்றைய காலத்தில் எதனால் நிறைய தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் இல்லை என்ற காரணத்தை முதலில் அறிய வேண்டும். அதனை அறிந்து அதில் தெளிவடைந்து, பின் பண்பாட்டை சரிப்படுத்தி யோகா பயின்றால் வெற்றி நிச்சயம்.

இன்றைய தம்பதியர்கள் இருவருமே மன அழுத்தத்தில் வாழ்கின்றனர். இதுவே ரத்த அழுத்தமாக மாறும். உடலில் மற்ற முக்கிய சுரப்பிகள் சரியாக சுரக்காமல் மன அழுத்தத்துடன் தம்பதியர் சேரும்பொழுது குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை.

செல்போனில் உள்ள கதிரியக்கம் அளவுக்கு மீறி பேசினால் பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும். ஆண்களுக்கு ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும். உணவில் கவனமாக இருக்க வேண்டும். பசித்தால் புசி, மாமிசம் தவிர். இரவு 7 மணிக்குள் அல்லது 8 மணிக்குள் கால் வயிறு உண்டால் போதும்.

விரிப்பில் அமரவும். இரு கால் பாதங்களையும் ஒன்று சேர்த்து கால்களை பக்கவாட்டில் வைத்து இரு கால் பாதங்களையும் உயிர்ஸ்தானத்திற்கு உள்முகமாக படுமளவு கொண்டு வரவும். (படத்தை பார்க்க) இரு கைகளையும் பக்கவாட்டில் சின் முத்திரையில் மூட்டின் மேல் வைக்கவும். ஆசனவாய் பூமியில் படக்கூடாது.

கண்களை மூடி மூன்று நிமிடங்கள் சாதாரண மூச்சில் இருக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரணமாக அமரவும்.

கணவன் / மனைவி இருவரும் தினமும் மூன்று நிமிடங்கள் காலை / மாலை பயிற்சி செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

குதபாத ஆசனத்தின் மற்ற பலன்கள்

• விந்துப்பை வலுவாகும்

• பெண்களின் கருப்பை குறை நீங்கும்

• மூலம் நீங்கும்

• மலச்சிக்கல் நீங்கும்

• சிறுநீரக கற்கள் கரையும்

• பித்தப்பை கற்கள் கரையும்

• அதிக உடல் எடை குறையும்

• மூட்டுவலி வராது

• மன அமைதி கிட்டும்

• பாத வலி வராது

• இளமையுடன் வாழலாம்

• மாதவிடாய் பிரச்சினை தீரும்

பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

63699 40440

pathanjaliyogam@gmail.com

Tags:    

Similar News