உடற்பயிற்சி

நாள்பட்ட தலைவலியை குணமாக்கும் அதோமுக ஸ்வானாசனம்

Update: 2022-07-06 04:22 GMT
  • கை, கை மணிக்கட்டுகளில் அடிபட்டவர்கள், வலி உள்ளவர்கள் செய்வதை தவிர்க்கலாம்.
  • நுரையீரலை பலப்படுத்தி நுரையீரல் சம்பந்தமான கோளாறுகளை போக்க உதவுகிறது.

வஜ்ஜிராசனத்துக்கு மாற்றாக அதோ முக ஸ்வானாசனம் செய்யப்படுகிறது. இது நாயின் முகம் கீழ் நோக்கியவாறு உள்ளது போன்ற அமைப்பினை கொண்டதால் இந்த ஆசனம் இப்பெயர் பெற்றது.

வஜ்ஜிராசனம் என்பது உடலின் நடுப்பகுதியை உறுதிப்படுத்தக் கூடியது. இந்த ஆசனம் அதை முழுமைப்படுத்த கூடியது. மேலும், வஜ்ஜிராசனத்தில் இருக்கும் போது கால்களின் முன்பக்கம் இழுக்கப்படுகிறது. அதோ முக ஸ்வானாசனத்தில் காலின் பின்புறம் இழுக்கப்படுகிறது. குறிப்பாக, sciatic நரம்பு இழுக்கப்பட்டு உறுதியாவதுடன் பின்னங்கால் தசைகளும் உறுதியாகின்றன.

செய்முறை : குப்புறப்படுத்துக் கால்களை நீட்டி, உள்ளங்கைகளைத் தரையில் பதித்து முன்னோக்கி வைக்கவும். மூச்சை வெளிவிட்டு உடலை மேலே உயர்த்தவும் தலையைப் பாதங்களைப் பார்க்குமாறு திருப்பி உச்சந்தலையைத் தரையில் பதிக்கவும். முழங்கால்களை மடக்காமல் உள்ளங்கால்களை முன்பாக வைத்து முழுப் பாதமும் தரையில் வைத்து உடலின் எடை கால்கள் மற்றும் தலையில் இருப்பது போல் செய்யவும். இந்நிலையில் ஆழமாகச் சுமார் ஒரு நிமிடம் சுவாசித்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்யவும்.

பலன்கள் : விளையாட்டு வீரர்களின் களைப்பைப் போக்கும். கணுக்கால்கள், தோள்பட்டை வலுப்பெறுகின்றன. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஏற்ற ஆசனமாகும். இதயம் சரிவரச் செயல்படுகிறது. நாள்பட்ட தலைவலியை போக்க உதவுகிறது.

நுரையீரலை பலப்படுத்தி நுரையீரல் சம்பந்தமான கோளாறுகளை போக்க உதவுகிறது.

மாதவிடாய் நிற்கும் கட்டத்தில் (menopause) ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.

அதோ முக ஸ்வானாசனம் ஜீரணத்தைப் பலப்படுத்தவும், மன அழுத்ததைப் போக்கவும் செய்வதால் இதன் காரணமாக ஏற்படக் கூடிய தலைவலியைச் சரி செய்யவும் தவிர்க்கவும் உதவுகிறது.

குறிப்பு : கர்ப்பிணி இதை செய்வதை தவிர்க்கவும். கை மற்றும் கை மணிக்கட்டுகளில் அடிபட்டவர்கள், வலி உள்ளவர்கள் செய்வதை தவிர்க்கலாம்.

Tags:    

Similar News