உடற்பயிற்சி
அனுசாசன முத்திரை, வாயு முத்திரை

மூட்டுக்கள் வலி, முதுகுவலியை குணமாக்கும் முத்திரைகள்

Update: 2022-02-17 02:35 GMT
நிறைய நபர்களுக்கு இப்பொழுது கொரோனா வைரஸ் வந்து சிகிச்சை எடுத்து சரியான பின் எலும்பு வலி, மூட்டுக்கள் வலி, முதுகுவலி ஏற்படுவதாக கூறுகின்றனர். இதற்கு அனுசாசன முத்திரையும், வாயு முத்திரையும் செய்ய வேண்டும்.
அனுசாசன முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் சுண்டு விரல் மோதிர விரல் நடுவிரலை மடக்கி கட்டைவிரலை மோதிர விரல் வெளிப்பகுதியில் வைக்கவும். ஆள்காட்டி விரல் நேராக இருக்கட்டும். கைகளை படத்தில் உள்ளது போல் தோள்பட்டை அருகில் வைக்கவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யுங்கள்.

வாயு முத்திரை செய்முறை : ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும் குறிக்கின்றன. நெருப்பு விரலால் காற்று விரல் அழுத்தப்பட்டு, உடலில் உள்ள வாயுவைக் குறைக்கிறது (Supress) என்று சொல்லலாம்.
Tags:    

Similar News