உடற்பயிற்சி
பிராங்கியல் முத்திரை

ஆஸ்துமாவை குணமாக்கும் பிராங்கியல் முத்திரை

Published On 2022-02-14 03:18 GMT   |   Update On 2022-02-14 03:18 GMT
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இன்று இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
நிறைய நபர்கள் இப்பொழுது வைரஸ் தொற்று வந்து சிகிச்சை எடுத்து குணமானபின் தொண்டை வலி அதிகமுள்ளது. சளியும் உடலில் தொடர்ந்து இருப்பதாக கூறுகின்றார்கள். இதற்கு சூன்ய முத்திரையும், பிராங்கியல் முத்திரையும். ஜலேந்திர பந்தமும் செய்ய வேண்டும். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

செய்முறை:

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும்.

பின் மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி கட்டை விரல் பக்கத்தில் வைத்து, கட்டை விரலையும் நடு விரலையும் தொடவும். ஆள்காட்டி விரல் தரையை நோக்கி இருக்கவும். இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
Tags:    

Similar News