மூட்டுக்கள் தேய்மானம் ஏற்பட்டாலும் மூட்டுவலி வரும். இந்த மூட்டுக்கள், மூட்டு எலும்புகள் சவ்வுகள் திடமாக இயங்க முத்திரைகள் உள்ளன.
வாயு முத்திரை:
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறைகள். பின் கண்களை திறந்து ஆள்காட்டிவிரலை மடித்து உள்ளங்கையில் வைத்து அதன்மேல் கட்டைவிரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை, மாலை இருவேளைகள் செய்யவும்.
அபான முத்திரை:
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறைகள். பின் கண்களை திறந்து மோதிரவிரல் நடுவிரலை மடித்து அதன் மையத்தில் கட்டைவிரல் நுனியை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் செய்யவும்.
உண்ண வேண்டிய பழங்கள்
அன்னாசி பழம், எலுமிச்சை, தர்பூசணி, சாத்துக்குடி, நெல்லிக்காய், ஆரஞ்சு, திராட்சை,
பச்சை காய்கறிகள்
வெண்டைக்காய், பூண்டு, வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட்.
கீரைகள்: பிரண்டை, முடக்கத்தான் கீரை, முருங்கைக்கீரை, அதிகம் உணவில் எடுத்துக் கொள்ளவும்.
யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440