இன்று நிறைய நபர்கள் நீரிழிவு வியாதியினால் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து முத்திரை செய்தால் சுகர் வராமல் சுகமாக வாழலாம்.
இன்று நிறைய நபர்கள் நீரிழிவு வியாதியினால் அவதிப்பட்டு வருகின்றனர். கணையத்தில் இரண்டு செல்கள் உள்ளன. ஆல்பா செல், பீட்டா செல், பீட்டா செல்தான் இன்சுலினை சுரக்கிறது.
இன்சுலின் ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி சரியான விகிதத்தில் வைத்திருக்கும். இன்சுலின் குறைந்தால் ரத்த குளுக்கோஸ் அளவு ஏறும். இதனையே நீரிழிவு, சுகர், சர்க்கரை வியாதி, டயாபடீஸ் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றோம்.
இந்தக் கணையம் ஒழுங்காக இயங்க உணவில் ஒழுக்கம், வாழ்வில் ஒழுக்கம் வேண்டும். அத்துடன் எளிய முத்திரை மூலம் கணையத்தை சிறப்பாக இயங்க செய்யலாம். நீரிழிவு உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த முத்திரைகளை பயிலுங்கள். நிச்சயம் சுகர் கட்டுக்குள் வரும். தொடர்ந்து முத்திரை செய்தால் சுகர் வராமல் சுகமாக வாழலாம்.
மேலும் இந்த முத்திரை தொடர்ந்து செய்து வந்தால் வெரிகோஸ் வெயின் குணமாகும். கால் பாதத்தில் ஏற்படும் வீக்கம் குறையும்.
உணவு: பசிக்கும் பொழுது பசியறிந்து நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும். முருங்கை கீரை வாரம் ஒரு நாள் சாப்பிடவும்,. நாவல் பழக்கொட்டையை பொடி செய்து ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து வாரம் இரு நாட்கள் சாப்பிடவும். கொய்யாப்பழம் ஒன்றை சிறு துண்டுகளாக்கி ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை மட்டும் குடிக்கவும்.காபி / டீ அதிகம் குடிப்பதை நிறுத்தி சுக்குமல்லி காபி பால் சேர்க்காமல் பருகவும்.
யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440