உடற்பயிற்சி
லிங்க முத்திரை, பிராங்கியல் முத்திரை, முகுள முத்திரை

குளிர் காலங்களில் செய்ய வேண்டிய முத்திரை

Published On 2021-12-02 02:32 GMT   |   Update On 2021-12-02 02:32 GMT
இந்த முத்திரைகளை செய்தால் குளிர்காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அதிக குளிரைத் தாங்கும் சக்தி கிடைக்கும். சளி பிடிக்காது. மூக்கடைப்பு வராமல் வாழலாம்.
லிங்க முத்திரை: விரிப் பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக் கட்டும். எல்லா கை விரல் களையும் இணைக்கவும். இடது கை கட்டை விரல் மட்டும் நேராக படத்தில் உள்ளது போல் வைக்கவும். கையை இதயத்திற்கு நேராக வைக் கவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடங்கள் செய்யவும். நுரையீரல் நன்கு இயங்கும். சளி / சைனஸ் / மூக்கடைப்பு வராது. குளிர் தாங்குமளவு உடலில் சக்தி கிடைக்கும்.

பிராங்கியல் முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மோதிரவிரல், சுண்டு விரலை கட்டை விரலின் அடிபக்கத்தில் வளைத்து தொடவும். நடுவிரல் பெரு விரல் நுனியைச் சேர்க்கவும். ஆள்காட்டி விரல் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் வரை இருக்கவும். பின் சாதாரணமாக கைகளை வைக்கவும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். ஆஸ்துமா / சைனஸ் வருவதை தடுக்கும். குளிர் காலத்தில் வரும் எல்லா வகையான காய்ச்சலும் வராமல் பாதுகாப்பாக வாழலாம்.

முகுள முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் பெரு விரலை நோக்கி மற்ற நான்கு விரல்களையும் குவித்து மேல் நோக்கி படத்தில் உள்ளது போல் வைக்கவும். இரு கைக ளிலும் பயிற்சி செய்யவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

பஞ்ச பூதங்களும் உடலில் சமமாக இயங்கும். இதயத் துடிப்பு சீராகும். குளிர் தாங்கும் சக்தியை உடல் உள் உறுப்புக்கள் பெறுகின்றது. உடலில் குளிர்காலம், மழைக் காலத்தில் ஏற்படும் சோம்பலை அகற்றி சுறுசுறுப்பை கொடுக்கின்றது. உடலில் குளிர், மழை காலங்களில் பஞ்ச பூதத்தில் ஏற்பட்ட மாறுபாடுகளை சரி செய்கின்றது.

யோகக் கலைமாமணி
பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440
Tags:    

Similar News