லைஃப்ஸ்டைல்

வார்ம் அப், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அவசியமா?

Published On 2018-10-01 05:17 GMT   |   Update On 2018-10-01 05:17 GMT
உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் உடல் பாகங்களையும் தயார்படுத்த ஸ்ட்ரெச்சிங், வார்ம் அப் பயிற்சிகள் அவசியமானது தானா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
முன்பு எல்லாம் பாடி பில்டர்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமே ஜிம்முக்குச் செல்வார்கள். இன்றோ இல்லத்தரசிகள் முதல் முதியவர்கள் வரை எல்லாதரப்பினரும் ஜிம்முக்குப் படை எடுக்கிறார்கள்.

பொதுவாக, காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே மிகவும் நல்லது. வொர்க் அவுட் செய்யும் முன் வெறும் வயிற்றில் இருப்பது நல்லது. குறைந்தபட்சம் சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்த பிறகு வொர்க் அவுட் செய்யலாம்.

ஜிம்முக்குள் நுழைந்ததுமே சினிமாவில் ஹீரோக்கள் உடற்பயிற்சி செய்வதைப் போல கடினமான வெயிட்ஸ் தூக்குவது, டம்பிள்சை தூக்கி புஜபலம் பார்ப்பது என வீரதீர சாகசங்களில் இறங்காதீர்கள். இதனால், ஒரே நாளில் கை, காலில் சுளுக்கோ ரத்தக்கட்டோ ஏற்பட்டு உடற்பயிற்சியே வேண்டாம் என்று ஜிம்மைவிட்டு ஓடும் மனநிலைக்குச் சென்றுவிடுவீர்கள்.

கடினமான மெஷின் வொர்க் அவுட்ஸ் எல்லாம் உடலை நன்கு மேம்படுத்தி வைத்திருப்பவர்களுக்கானவை. தொடக்க நிலையில் உடல் தசைகளை உடற்பயிற்சிக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டியது அவசியம். எனவே, தலை முதல் பாதம் வரை உள்ள எல்லா இணைப்புகளையும், உடல் பாகங்களையும் தயார்படுத்த ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், வார்ம் அப் பயிற்சிகள் மிகவும் அவசியம்.

ஜிம் ட்ரெய்னரிடம் கலந்து ஆலோசித்து எத்தனை நாட்களுக்கு வார்ம் அப், ஸ்ட்ரெச்சிங் மட்டும் செய்துகொண்டிருக்க வேண்டும் என முடிவு செய்தபின் அடுத்தகட்ட உடற்பயிற்சிக்குள் நுழையுங்கள். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப பயிற்சிகள் மாறுபடும். எந்தவிதமான உடற்பயிற்சி என்றாலும் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டியது அவசியம். ஜிம் ட்ரெய்னரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாக கண்டதையும் தூக்கி பயிற்சி செய்து உடலைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். 
Tags:    

Similar News