பெண்கள் உலகம்

பச்சிளம் குழந்தை பசியுடன் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?

Published On 2019-02-02 13:15 IST   |   Update On 2019-02-02 13:15:00 IST
பிறந்த குழந்தைகள் எப்பொழுது பசியாக உணர்வார்கள் மற்றும் அவர்களுக்கு எவ்வளவு உணவு அளிக்க வேண்டும் என்பது புதிய தாய்மார்களுக்கு பெரிய சந்தேகமாக, கேள்வியாக இருக்கும்.
குழந்தைக்கு பசி ஏற்படுவதை நான் எப்படி அறிவது என்ற கேள்வி தாய்மார்களின் மனதில் எழலாம். பிறந்த குழந்தைகள் எப்பொழுது பசியாக உணர்வார்கள் மற்றும் அவர்களுக்கு எவ்வளவு உணவு அளிக்க வேண்டும் என்பது புதிய தாய்மார்களுக்கு பெரிய சந்தேகமாக, கேள்வியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் அமுதை பிறந்த தருணம் முதல் ஆறு மாத காலம் வரை கண்டிப்பாக தாய்மார்கள் அளிக்க வேண்டியது அவசியம்.

குழந்தைக்கு பசி எடுத்தால், பால் குடிப்பது, பாலை உறிஞ்சுவது போன்ற செய்கைகளை செய்யும், குழந்தை அன்னையின் மார்பகத்தை நோக்கியே முகத்தைக் கொண்டு வரும்; தலையை திருப்பிக் கொண்டே இருக்கும், குழந்தைக்கு அதிகம் பசி எடுத்தால், அழ ஆரம்பித்து விடும் - இது போன்ற அறிகுறிகள் மூலம் குழந்தைக்கு பசி எடுப்பதை அன்னையர்கள் அறியலாம்.

மேலும் குழந்தைக்கு இரவில் அதிகம் பசி எடுக்கும், குழந்தைக்கு பால் குடிக்க வேண்டும் என்ற உணர்வும் இரவில் அதிகம் ஏற்படும். முதல் மாதத்தில் குழந்தைக்கு எடை குறைவு ஏற்பட்டால், பயம் கொள்ள வேண்டாம்; இது இயற்கையே! குழந்தை பிறந்த பின் முன்பு இருந்த எடையில் 10% எடையை இழக்கும்; பின் சிறிது நாட்களிலேயே குழந்தையின் எடை கூடத் தொடங்கி, இழந்த எடையை குழந்தையின் உடல் பெற்று விடும்.

குழந்தைகளுக்கு எப்பொழுது உணவு அளித்தாலும், அவர்கள் வயிறு நிரம்பும் வரை மட்டுமே உணவு அளிக்க வேண்டும்; அளவுக்கு அதிகமாக உணவினை திணிக்க கூடாது. குழந்தைகள் தனக்கு பசி எடுப்பதையும், உணவு வேண்டாம் என்பதையும் தனது அறிகுறிகள் மற்றும் தனது செயல்களின் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தும்.

Similar News