கால்பந்து

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதி ஆட்டங்கள் நாளைமறுதினம் தொடக்கம்

Published On 2023-08-09 01:28 GMT   |   Update On 2023-08-09 01:28 GMT
  • 11-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்- நெதர்லாந்து, ஜப்பான்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை
  • 12-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து- கொலம்பியா, ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன.

தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. நேற்று கடைசி இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் கொலம்பியா- ஜமைக்கா அணிகள் மோதின. இதில் கொலம்பியா 1-0 என ஜமைக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ்- மொரோக்கோ அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 4-0 என மொரோக்கோவை துவம்சம் செய்து காலிறுதிக்கு முன்னேறின.

காலிறுதி ஆட்டங்கள் வருகிற 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெறுகின்றன. 11-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்- நெதர்லாந்து, ஜப்பான்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

12-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து- கொலம்பியா, ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Tags:    

Similar News