ஆசிரியர் தேர்வு

வேளாண் கண்காட்சி மற்றும் விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்ற போது எடுத்த படம்.

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கண்காட்சி- விவசாயிகள் கருத்தரங்கு

Published On 2023-01-30 06:58 GMT   |   Update On 2023-01-30 06:58 GMT
  • வேளாண்மை அறிவியல் நிலையம், அட்மா திட்டம் சார்பில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
  • கருத்தரங்கில் நாமக்கல், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜூ சிறப்புரை ஆற்றினார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம், அட்மா திட்டம் சார்பில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தலைமை தாங்கி ெதாடங்கி வைத்தார்.உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் நாமக்கல், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜூ சிறப்புரை ஆற்றினார் .

மேலும் சேலம், சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், திட்ட ஒருங்கிணைப்பாளர், ஜெகதாம்பாள், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுதுரை, உதவி பேராசிரியர்கள் முருகன், சங்கர், சத்யா, முத்துசாமி, பால்பாண்டி, தேன்மொழி ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களை கேட்டறிந்து விளக்கம் அளித்தனர்.

கண்காட்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய முறையில் சிறுதானிய மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் பி.ஜி.பி வேளாண்மை கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் வாயிலாக இயற்கை வேளாண்மை குறித்தும், சிறுதானியங்கள் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினர். முடிவில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News