வழிபாடு

சனிக்கிழமை சனி ஹோரையில் வராகி அம்மனை வழிபடுங்கள்...

Published On 2025-05-31 14:56 IST   |   Update On 2025-05-31 14:56:00 IST
  • முடிந்து போன உங்களுடைய வாழ்க்கை மீண்டும் நல்லபடியாக தொடர ஆரம்பிக்கும்.
  • ஒரு சில வாரங்களில் உங்களுடைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

வராகி அம்மனை அனைத்து தினங்களிலும் வழிபடுவது சிறப்பு தான் என்றாலும் சனி ஹோரையில் பஞ்சமி தினமான இன்று வழிபடுவது உங்கள் குடும்பத்திற்கே நன்மையை கொடுக்கும்.

சனிக்கிழமை வராகி வழிபாடு ஏன் சிறந்தது என்று தெரியுமா?

சனிக்கிழமை பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபாடு செய்து வந்தால் நிச்சயமாக நம்முடைய கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். முடிந்து போன உங்களுடைய வாழ்க்கை மீண்டும் நல்லபடியாக தொடர ஆரம்பிக்கும். வீட்டில் இருப்பவர்கள் யாருக்காவது தீராத நோய் பிரச்சனை இருக்கலாம். அல்லது வருமானத்திற்கே வழி இல்லாமல் வாழ வழி இல்லாமல் நடுவீதியில் நிற்கக்கூடிய நிலைமை இருந்தாலும் கூட நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிடித்து வைத்து அதை வராகி என்று நினைத்து வழிபாடு செய்தால், இந்த உலகத்தில் வாழ்வதற்கு உண்டான தகுதி அனைத்தும் உங்களைத் தேடி வரும்.

சனிக்கிழமைகளில் வாராகி அம்மனை எப்படி வழிபாடு செய்வது?

சனிக்கிழமை சனி ஹோரை நேரத்தில் வாராகி அம்மன் படத்தை துடைத்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். வராகி அம்மனின் திருவுருவப் படம் இல்லை என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் திருவுருவப்படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. சிறிது மஞ்சளில் பன்னீர் ஊற்றி குழைத்து, மஞ்சள் பிள்ளையார் போல பிடித்து வைத்து அதை வராகித் தாயாக நினைத்துக் கொண்டு வழிபட நற்பலன் கிடைக்கும். ஒரு செம்பருத்திப்பூ இல்லை என்றால், நீல நிற சங்குப்பூ, சிவப்பு நிற அரளிப்பூ வைத்து கூட அலங்காரம் செய்து கொள்ளலாம்.

மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் பத்து வெண் கடுகுகளை போட்டு, தீபம் ஏற்றி பூஜையறையில் வைத்து விடுங்கள். நைவேதியமாக ஒரு டம்ளர் பானகம் வைத்தால் கூட போதும். பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபத்திற்கு முன்பு அமர்ந்து வராகி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும். உங்கள் கஷ்டங்களை சொல்லி, அந்த கஷ்டம் சரியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் ஒரு சில வாரங்களில் உங்களுடைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வர சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும்.

கடன் தொல்லை, வறுமை, பண பிரச்சனை போன்றவைகள் நீங்கும்.

எதிர்பாராத ஆபத்துகளும், விபத்துக்களும் விலகி ஓடும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வாக்கு பலிதம் ஏற்படும், நீண்ட நாள் நோய்கள் குணமாகும். தீவினை கோளாறுகள் நீங்கும்.

சுபகாரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி குடும்பத்தில் மங்கல காரியங்கள் நடைபெறும்.

உங்கள் வாழ்க்கையில் ஒளி வீச வாரம் தோறும் வரும் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் இந்த தீபத்தை ஏற்றி வராகி அம்மனுக்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள்.

Tags:    

Similar News