null
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மலைவலம் வந்து மகத்துவம் காணவேண்டிய நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பழைய பாக்கிகள் வசூலாகும்.
ரிஷபம்
எதிரிகளின் பலம் கூடும் நாள். இல்லத்தில் அமைதி குறையும். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சச்சரவு ஏற்படும்.
மிதுனம்
புதிய பாதை புலப்படும் நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உறவினர் பகை மாறும்.
கடகம்
யோகமான நாள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன் பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். பயணத்தால் ஆதாயம் உண்டு. எதிர்காலம் பற்றிய பயம் அகலும்.
சிம்மம்
போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கன்னி
தேக்கநிலை மாறி ஊக்கமுடன் செயல்படும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டதற்கு ஆதாயம் கிடைக்கும்.
துலாம்
மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். அலைபேசி மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும். மனை தேடி மங்கலச் செய்தி வந்து சேரும்.
விருச்சிகம்
வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.
தனுசு
தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பற்றி சிந்திப்பீர்கள்.
மகரம்
முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
கும்பம்
மனக்கலக்கம் அகலும் நாள். தேவைகள் பூர்த்தியாகத் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. பயணத்தால் பலன் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.
மீனம்
வசதிகள் பெருகும் நாள். வருமானம் உயரும். வழிபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவர்.