வழிபாடு

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு ஸ்நாபன திருமஞ்சனம்

Published On 2023-02-07 06:16 GMT   |   Update On 2023-02-07 06:16 GMT
  • சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
  • ஊஞ்சல் சேவை நடந்தது.

திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குப்பசந்திரபேட்டை உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று குப்பசந்திரபேட்டை உற்சவம் நடத்தப்பட்டது. அதற்காக நேற்று காலை 6 மணியளவில் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமர் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டனர்.

மேள தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க திருப்பதி அருகே 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குப்பசந்திரபேட்டை கிராமத்துக்கு காலை 9.30 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்கு காலை 10 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், சந்தனம் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் மாலை ஊஞ்சல் சேவை நடந்தது. அங்கிருந்து உற்சவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடைந்தனர். சாமி ஊர்வலத்தினபோது இந்து தர்ம பிரசார பரிஷத், தாச சாகித்திய திட்டங்களின் கீழ் பஜனை மற்றும் கோலாட்டங்கள் நடந்தன.

உற்சவத்தில் சின்ன ஜீயர் சுவாமி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

Similar News