வழிபாடு

பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாள்: சின்னசேஷ வாகனத்தில் கோதண்டராமர் வீதி உலா

Update: 2023-03-22 04:54 GMT
  • கோதண்டராமர், சீதா, லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9.30 மணி வரை சின்னசேஷ வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத் தொடர்ந்து காலை 11 மணியில் இருந்து பகல் 12 மணி வரை கல்யாண மண்டபத்தில் கோதண்டராமர், உற்சவர்களான சீதா, லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.

இரவில் ஹம்ச வாகனத்தில் உற்சவர் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

Similar News