வழிபாடு

இந்த வார விசேஷங்கள் 15-12-2022 முதல் 21-12-2022 வரை

Published On 2022-12-15 07:04 IST   |   Update On 2022-12-15 07:04:00 IST
  • 16-ம்தேதி மார்கழி மாதப் பிறப்பு.
  • 21-ம் தேதி பிரதோஷம்

15-ந்தேதி (வியாழன்)

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* கீழ்நோக்கு நாள்.

16-ந்தேதி (வெள்ளி)

* மார்கழி மாதப் பிறப்பு.

* மதுரை மீனாட்சியம்மன் சகல ஜீவகோடிகளுக்கு படியளந்து அருளிய காட்சி.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.

* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

* சகல ஆலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம்.

* மேல்நோக்கு நாள்.

17-ந்தேதி (சனி)

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* சமநோக்கு நாள்.

18-ந்தேதி (ஞாயிறு)

* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

* சமநோக்கு நாள்.

19-ந் தேதி (திங்கள்)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* திருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு.

* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல்.

* சமநோக்கு நாள்.

20-ந்தேதி (செவ்வாய்)

* தேய்பிறை துவாதசி

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு

* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி

* சிறிய நகசு

21-ந்தேதி (புதன்)

* பிரதோஷம்

* கரிநாள்

* மாத சிவராத்திரி

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை

* சிறிய நகசு

Tags:    

Similar News