வழிபாடு

திருவண்ணாமலை திருநேர் அண்ணாமலையார் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு

Published On 2023-04-15 03:51 GMT   |   Update On 2023-04-15 03:51 GMT
  • லிங்கத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
  • சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் கிரிவல பாதை திருநேர் அண்ணாமலையார் கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்புத்தாண்டு தினமான சித்திரை மாதம் 1-ந் தேதியன்று காலையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். அதன்படி நேற்று காலை லிங்கத்தின்மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. அதனை காண அதிகாலையில் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். முன்னதாக லிங்கத்திற்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுந்ததும் அங்கிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். பின்னர் சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News