வழிபாடு

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ஆன்லைன் பண பரிவர்த்தனை சேவை தொடக்கம்

Published On 2022-10-27 11:46 IST   |   Update On 2022-10-27 11:46:00 IST
  • ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் இ-வங்கி சேவை தொடங்கப்பட்டது.
  • பக்தர்கள் இனிமேல் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தலாம்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் இ-வங்கி சேவை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மா, கும்மனம் ராஜசேகரன் மற்றும் வங்கி அதிகாரிகள் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் இனிமேல் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News