வழிபாடு

திருத்தணி முருகன் கோவிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட மயில் வாகனம் காணிக்கை

Published On 2022-07-19 06:11 GMT   |   Update On 2022-07-19 06:11 GMT
  • இந்த மயில் வாகனத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
  • திருத்தணியில் உள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இக்கோவிலில் முருகப் பெருமான் மாட வீதியில் வலம் வருவதற்காக மயில் வாகனம், பூத வாகனம், யானை வாகனம், புலி வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மற்றும் தங்கத்தேர், வெள்ளித்தேர் ஆகியவை மலைக்கோவிலில் உள்ளன.

இந்த வாகனங்களில் பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கியமான நாட்களில் சுவாமி ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்நிலையில் தமிழ்நாடு தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கத்தின் சார்பில் மயில்வாகனம் உருவாக்கப்பட்டது, பின்னர் சுமார் 50 கிலோ எடை கொண்ட செப்புத்தகடு மயில்வாகனம் மீது பொருத்தப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு, நேற்று மலையடிவாரத்தில் உள்ள புதிய தோட்டக்காரர் சத்திரத்தில் வைக்கப்பட்டது.

பின்னர் மயில் வாகனத்தை ஊர்வலமாக மலைக்கோவிலுக்கு கொண்டுசென்று பூஜை செய்து காணிக்கையாக கோவில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த மயில் வாகனத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

Tags:    

Similar News