வழிபாடு

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வாழை இலையில் அன்னதானம்

Published On 2022-09-25 03:20 GMT   |   Update On 2022-09-25 03:20 GMT
  • கடந்த சில நாட்களாக தொன்னையில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
  • திருமண பந்திகளில் பரிமாறுவது போல், அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் வாழை இலை போட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. பக்தர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

கொரோனா தொற்று குறைந்த பிறகு கடந்த சில நாட்களாக தொன்னையில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அது பக்தர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இந்நிலையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று முதல் பக்தர்களை அமரவைத்து, மீண்டும் வாழை இலையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. திருமண பந்திகளில் பரிமாறுவது போல், அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

Tags:    

Similar News