வழிபாடு

திருக்கோஷ்டியூர் கோவில் கும்பாபிஷேகம்: யாக சாலை பூஜையுடன் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி தொடக்கம்

Published On 2023-01-28 07:47 GMT   |   Update On 2023-01-28 07:47 GMT
  • மார்ச் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
  • ஆனி மாதம் சொர்ணா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் கோபுரத்தில் உள்ள விமானத்திற்கு தங்க தகடு பதிக்கும் திருப்பணியும், ராஜகோபுரம், சன்னதிகள், திருமதில் ஆகியவற்றுக்கு திருப்பணிகளும் தனித்தனியாக நடைபெற்று வந்தது. மேலும் தங்க விமான திருப்பணியில் தாமிர தகடு, தங்க தகடு பதிக்கும் பணி நடைபெற உள்ளது.

இதையடுத்து ஆனி மாதம் இதற்கான சொர்ணா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ராஜகோபுரம், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கான திருப்பணிகள் நிறைவு பெற்றதால் வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

மேலும் 8 கால பூஜைகளுடன் யாகசாலை பூஜையும் நடைபெற உள்ளதால் அதற்கான யாகசாலை கோவில் வளாகத்தில் மகாமக கிணறு அருகில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் யாகசாலைக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News