வழிபாடு

கார்மல் நகர்தூய திருக்குடும்ப ஆலய திருவிழா தேர்பவனி

Published On 2023-01-03 05:46 GMT   |   Update On 2023-01-03 05:46 GMT
  • தேர்பவனியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
  • ஆலய திருவிழா 10 நாட்கள் நடந்தது.

நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல் நகர் தூய திருக்குடும்ப ஆலய திருவிழா 10 நாட்கள் நடந்தது. இதில் 8 மற்றும் 10-ம் நாள் தேர் பவனி நடைபெற்றது. 10-ம் நாள் விழாவன்று காலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், பகல் 2 மணிக்கு ஆலய வளாகத்தில் இருந்து தேர் பவனியும் புறப்பட்டது. இதில் பங்குத்தந்தை அருட்பணியாளர் சகாய பிரபு கலந்து கொண்டு தேர்பவனியை ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.

மேளதாளத்துடன் புறப்பட்ட தேர்பவனிக்கு ஊரின் முக்கிய வீதிகள், சந்திப்புகளில் வரவேற்பு அளிக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது. இதில் பக்த சபையினர், பாடகர் குழுவினர், இளைஞர் இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ராமன்புதூர் சந்திப்பில் ஊர் நிர்வாகக்குழு தலைவர் ஜோசப் சுந்தர்ராஜ், செயலாளர் ஜீலியன், பொருளாளர் ஆன்றோ ஜெபின் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, ஊர் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பங்குமக்கள் இணைந்து செய்து இருந்தனர்.

Tags:    

Similar News