வழிபாடு

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2023-01-13 08:05 GMT   |   Update On 2023-01-13 08:05 GMT
  • பிரம்மோற்சவ விழா வருகின்ற 17-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
  • 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

வீரராகவப் பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா வருகின்ற 17-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதி குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் சப் கலெக்டர் மகாபாரதி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.

அப்போது தேர் செல்லும் நான்கு மாட வீதிகளில் சாலை வசதி, மின் கம்பங்கள் சரியான உயரத்தில் இருக்கிறதா, மின் வயர்கள் உரசாத அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறதா, சாலையோர கடைகள் இருந்தால் அதை அகற்றுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது உதவி போலீஸ் சூப்பிரண்ட் விவேகானந்தர் சுக்லா, நகராட்சி ஆணையர் ராஜ லட்சுமி, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்ட பொறியாளர் எஸ்.ஜே.தஸ்நேவிஸ் பெர்னாண்டோ, மின்வாரிய அதிகாரிகள் யுவராஜ், தட்சிணாமூர்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ, டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, வருவாய் ஆய்வாளர் கணேஷ் வீரராகவர் கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News