வழிபாடு

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழா கால்நாட்டு விழா நாளை நடக்கிறது

Published On 2022-12-07 01:30 GMT   |   Update On 2022-12-07 01:30 GMT
  • மார்கழி திருவிழா 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  • ஜனவரி 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டமும், அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், 6-ந் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். முன்னதாக வருகிற 26-ந் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

மார்கழி திருவிழாவையொட்டி இதற்கான கால்நாட்டு விழா வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 7.30 மணிக்கு தாணுமாலய சாமி கோவிலின் அருகே உள்ள முருகன் சன்னதி முன்பு கால்நாட்டு வைபவம் தொடங்குகிறது. தொடர்ந்து மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முன்பு கால் நாட்டு வைபவம் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News