வழிபாடு

ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2022-08-12 05:00 GMT   |   Update On 2022-08-12 05:00 GMT
  • 20-ந்தேதி புனிதரின் அலங்கார தேர்ப்பவனியும் நடக்கிறது.
  • 21-ந்தேதி தேர் பவனியும், இரவு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

திங்கள்சந்தை அருகே உள்ள ஆரோக்கியபுரம் ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. விழா வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இன்று மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி புதிய கொடிமரத்தை அர்ச்சித்து கொடியேற்றி வைக்கிறார். தொடர்ந்து திருப்பலி, உறுதிபூசுதல் போன்றவை நடைபெறும். நிகழ்ச்சியில் பங்குதந்தை டோமினிக் சாவியோ முன்னிலை வகிக்கிறார்.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

20-ந்தேதி முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலியும், இரவு 7 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீரும், 8.30 மணிக்கு புனிதரின் அலங்கார தேர்ப்பவனியும் நடக்கிறது. 21-ந்தேதி காலை 9 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறும். இதற்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் யேசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பிரம்மஸ்சிங் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர் பவனியும், இரவு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை டோமினிக் சாவியோ, பங்கு பேரவை உதவி தலைவர் பீட்டர் தாஸ், செயலாளர் மேரி சர்ஜீன், உதவிச் செயலாளர் மேரி சுகந்தி, பொருளாளர் மரிய ஆரோக்கியம் மற்றும் பங்குமக்கள், பக்த சபைகள் இணைந்து செய்துள்ளனர்.

Tags:    

Similar News