வழிபாடு

சீனிவாசமங்காபுரம் கோவிலில் பாஷ்ய பாராயணம் 7-ந்தேதி நடக்கிறது

Published On 2022-09-05 05:57 GMT   |   Update On 2022-09-05 05:57 GMT
  • 12 வேத பண்டிதர்கள் உலக மக்கள் நன்மைக்காக பாஷ்ய பாராயணம் செய்கிறார்கள்.
  • புதிய நடைமுறை மற்றும் பாரம்பரியத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.

வாமன ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் 7-ந்தேதி பாஷ்ய பாராயணத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. சங்கராச்சாரியாரின் அத்வைதம், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் மற்றும் ஸ்ரீமத்வாச்சாரியாரின் அத்வைதம் மற்றும் லட்சுமி விசிஷ்டாத்வைதம் ஆகிய வைகானச மரபில் தேர்ச்சி பெற்ற 12 வேத பண்டிதர்கள் உலக மக்கள் நன்மைக்காக பாஷ்ய பாராயணம் செய்கிறார்கள்.

உபநிடத மந்திரங்களுக்கு இசைவாக பாஷ்ய பாராயணத்தை நடத்தும் புதிய நடைமுறை மற்றும் பாரம்பரியத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. திருமலை-திருப்பதி தேவஸ்தான ஆகம ஆலோசகர் ஆச்சாரியார் வேதாந்தம் விஷ்ணு பட்டாச்சாரியார் இந்து தர்ம பிரசார பரிஷத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மேற்கண்ட நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News