வழிபாடு

மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் சப்பர திருவிழா

Published On 2022-08-09 06:07 GMT   |   Update On 2022-08-09 06:07 GMT
  • பொதுமக்கள் தேரை வடம் பிடித்து 4 ரத வீதிகளிலும் இழுத்து வந்தனர்.
  • திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து தினமும் இரவு சிம்மம், அன்னம், கமலம், யானை, கிளி, விருஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூப்பல்லக்கு, சப்பரம் ஆகியவற்றிலும் சாமி எழுந்தருளி வீதி உலா வந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று மாலை 4 மணிக்கு அம்மன் சப்பரத்திற்கு எழுந்தருளினார்.இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

பின்னர் சப்பரத்தை சன்னதி புதுக்குளம் கிராமத்தினர் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து 4 ரத வீதிகளிலும் இழுத்து வந்தனர். திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News