வழிபாடு

குடமுழுக்கு பத்திரிகையை தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட போது எடுத்த படம்.

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்குஅடுத்த மாதம் 24-ந் தேதி நடக்கிறது

Published On 2023-04-16 05:18 GMT   |   Update On 2023-04-16 05:18 GMT
  • இந்த கோவில் வரலாற்று சிறப்புமிக்க தலமாகும்.
  • இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தலமாகும். மேலும் காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவர்களுக்கும் தனி சன்னதி இங்குதான் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது.

இதையடுத்து அடுத்த மாதம் (மே) 24-ந் தேதி குடமுழுக்கு நடத்திட தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான திருப்பணிகளை தொடங்கி வைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று குடமுழுக்குக்கான பத்திரிகையை தருமபுரம் ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சட்டைநாதர் கோவிலுக்கு நேரில் வந்து திருநிலை நாயகி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் திருஞானசம்பந்தர் , அஷ்ட பைரவர், விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதியில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.அதைத்தொடர்ந்து குடமுழுக்கு பத்திரிகையை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு வழங்கி அருள் ஆசி வழங்கினார்.

அப்போது தமிழ்ச் சங்க தலைவர் மார்க்கோனி, செயலாளர் கோவி நடராஜன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து, தலைமை மருந்தாளுனர் முரளி, கோவில் நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News