வழிபாடு

பவுர்ணமி, தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

Published On 2023-02-05 02:02 GMT   |   Update On 2023-02-05 02:02 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.
  • 3, 4 ஆகிய தேதிகளில் சதுரகிரி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக கடந்த 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே பருவநிலை மாற்றம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 3, 4 ஆகிய தேதிகளில் சதுரகிரி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. போலீசார் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனைவரும் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிக்கு அதிகாலை முதலே பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News